கேரளாவில் பெய்த கனமழை புவி வெப்பமயமாதல்: இந்தியாவுக்கு எச்சரிக்கை

kerala-flood

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 13 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய வழக்கமான மழையை விட, கடந்த 2 வாரங்களில் மட்டும் இரண்டரை மடங்கு மழை பெய்துள்ளதாக வானியல் அறிஞர்கள் கூறியுள்ளனர். கடந்த 10ம் தேதி, மாநிலத்தில் உள்ள 35 அணைகள் முழுவதும் நிரம்பின. 26 ஆண்டுக்கு பின் இடுக்கி அணை திறந்துவிடப்பட்டது.

ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானி கிரா வின்கே கூறியதாவது: கேரளாவில் தற்போது ஏற்பட்ட பெரு வெள்ளம், புவி வெப்பமயமாதலால் ஏற்படும் மாற்றத்தின் ஒரு பகுதியே. நாம் இன்னும் மாசு அளவை அதிகரித்து கொண்டே சென்றால், அதனால் ஏற்படும் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும். பருவநிலையை கணிப்பது மேலும் கடினமாகி கொண்டு போகிறது. இந்தியாவில் புவி வெப்பமயமாதல் அதிகரித்து கொண்டால், மழைகாலங்களில் அதிக மழை பெய்யும். வெயில் காலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். என்றார்.

இந்தியா, சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால்,மாறி வரும் பருவநிலையும் வெப்ப அளவு கூடுதலும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியா ஜிடிபியில் 2.8 சதவீதத்தை இழப்பது மட்டுமல்லாமல், பாதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என உலக வங்கி எச்சரித்துள்ளது. இந்தியாவில் வெப்பநிலையானது 1.5 செல்சியஸ் முதல் 3 செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக உலக வங்கி கணித்துள்ளது.

சிவகார்த்திகேயனின் செல்ல மகள் ஆராதனா பாடியுள்ள `வாயாடி பெத்த புள்ள’ பாடல்!

சிவகார்த்திகேயன் மற்றும் பாடகி `வைக்கம்’ விஜயலட்சுமியுடன் சேர்ந்து ஆராதனாவும் பாடியுள்ளார். இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

146908_thumb_665

சிவகார்த்திகேயன் தனது செல்ல மகள் ஆராதனாவையும் பாடகியாக அறிமுகப்படுத்தியுள்ளார்.பாடலைப் பாடும்போது ஆராதனா காட்டும் ரியாக்ஷன்கள், வார்த்தை உச்சரிப்பு, குரல்வளம் அனைத்தும் `கியூட்’ ஆக இருப்பதால், இப்பாடல் இணையதளங்களில் தற்போது வைரல் ஹிட் அடித்துவருகிறது.

னது நண்பர்களை இந்தப் படத்தில் இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன்

சென்றாயனுக்கு நடந்த துயரம்… இதைக் கேட்பாரில்லையா?

sendrayan-3

பிக்பாஸ் வீட்டில் இன்று மூன்று முக்கியமான விஷயங்கள் நடந்தன.

  1.  சமையல் போட்டியில் சென்றாயன் வெற்றி பெற்றது. ‘அவருக்கு சமையல் வராது. அவரோட வொர்க் பண்றது எனக்கு ஒத்துவராது, ஹைஜீனா இருக்க மாட்டாரு” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த மும்தாஜே ‘சென்றாயன் சமையல் சூப்பர்’ ….
  2. ஆமை’ விருதை தந்த டேனி, ‘முயல் – ஆமை’ கதை மாதிரி பிக்பாஸில் நீ வெற்றி பெற வாழ்த்து’ என்று சொன்னது உண்மையிலேயே நிஜமாகி விடும் போலிருக்கிறது.
  3. மூன்றாவது விஷயம், வைல்ட் கார்ட் எண்ட்ரி. இந்தியச் சுதந்திரம் போல் நள்ளிரவில் வந்து சேர்ந்தார் புதிய போட்டியாளர் விஜயலஷ்மி. நடுராத்திரியில் சரோஜாவை தொந்தரவு செய்தது மட்டுமல்லாமல் போட்டியாளர்களின் உறக்கத்தையும் கலைத்து இம்சைப்படுத்தினார்கள்.