பிக்பாஸ் வீட்டில் இன்று மூன்று முக்கியமான விஷயங்கள் நடந்தன.
- சமையல் போட்டியில் சென்றாயன் வெற்றி பெற்றது. ‘அவருக்கு சமையல் வராது. அவரோட வொர்க் பண்றது எனக்கு ஒத்துவராது, ஹைஜீனா இருக்க மாட்டாரு” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த மும்தாஜே ‘சென்றாயன் சமையல் சூப்பர்’ ….
- ஆமை’ விருதை தந்த டேனி, ‘முயல் – ஆமை’ கதை மாதிரி பிக்பாஸில் நீ வெற்றி பெற வாழ்த்து’ என்று சொன்னது உண்மையிலேயே நிஜமாகி விடும் போலிருக்கிறது.
- மூன்றாவது விஷயம், வைல்ட் கார்ட் எண்ட்ரி. இந்தியச் சுதந்திரம் போல் நள்ளிரவில் வந்து சேர்ந்தார் புதிய போட்டியாளர் விஜயலஷ்மி. நடுராத்திரியில் சரோஜாவை தொந்தரவு செய்தது மட்டுமல்லாமல் போட்டியாளர்களின் உறக்கத்தையும் கலைத்து இம்சைப்படுத்தினார்கள்.
